Subscribe Us

Header Ads

Tamil Stories | Kathaikal | சிறுகதைகள் -யாதும் ஊரே யாவரும் கேளிர்

 ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம்!!!





 

திறனாளியான குழந்தைதனை பள்ளி வாசலில் விடுகையில்

எழுந்திடும் எண்ணம் எத்தனைக் கடினம் பிள்ளைகளைத்தயாராக்க!

 

ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்

மா‌ற்று‌த் திறனாளியான குழந்தைதனை எந்தவித சோர்வும்மின்றி

தாய் புன்னகையுடன் வழியனுப்புகையில்!

 

வேலைக்காரி வரவில்லையே குப்பையை கொட்ட - முகம்சுலித்திடும்

தன் வீட்டுக்குப்பையைத் தொட.

 

ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்

குப்பையைச் சுத்தம் செய்யும் பணியாளன் தான் இழுத்துவரும்

ஊர்தியில் இருந்து தனது காலை உணவுபையை எடுத்துஉணவருந்தும்போது!

 

மருத்துவ மனையில் நொந்துகொள்வோம்...கூடவரவில்லையேஎன்று

நாற்பதுவயது கூட தாண்டாத நாம்.

 

ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்

எழுவதைத் தொட்டும் கலக்கமே இல்லை முகத்தில்

துணிவாக மூதாட்டி மருந்து சீட்டுடன்தனியாக.

 

கணவன் மனைவி சண்டைவாழ்க்கையே வெறுத்ததுஇதயமேதுடிக்க மறுக்கிறதுஆனால்

கைவிட்டு எண்ணும் நாள்தான் மீண்டும் கரங்கள் இணையும்!

 

ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்

கைபிடித்தவனை(ளைஇழந்து கலாச்சார வட்டத்திற்குள்

இளமையில் தனிமையில் அவன்(ள்) -வாழ்க்கையில் எதுதுன்பம்!

 

கற்பமாய் இருக்கிறேன் பக்கத்திலிருந்து பழச்சாருகொடுக்கவில்லையே

கோபமாய் கட்டலில் படுத்துக்கொண்டு.

 

ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்

வயிற்றில் குழந்தையுடன் கால்முட்டியிட்டு

தன் கட்டலின் அடியே துடைத்துவரும்பணிபெண்ணைப்பார்த்தபோது!

 

பணிக்குப் போகும் தாய் குழந்தையை வீட்டில் விட்டுச்செல்லும்போது நொறிங்கிவிடும் மனது.

அங்கே குழந்தை விளையாட்டுபொமைகளோடு பஞ்சுமெத்தையில்.

 

ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்

காய்கறி வண்டியில் தனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காயாககாய்ந்து கொண்டே

காயைப்பாவையாய் எண்ணி விளியாடியவாறே ஊர்வலம்வரும்குழந்தைதனை பார்க்கையில்!

 

காரில்ப்ரயாணிக்கும் வேலையிலும் பலமுறை கூறிடுவோம்ஓட்டுனரிடம் பார்த்து கவனமாக

 

ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்

கைத்தடியைமட்டும் வைத்துக்கொண்டு நெரிசலானசாலையைகடக்கும்

பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் தன்நம்பிக்கையைப்பார்க்கையில்!

 

வேலைக்காகப் பிள்ளைகள் வெளியூர் சென்றுவிட்டனர் - அவர்கள் கற்றுக்கொடுத்த

வாட்சப்பிலும்பேஸ்புக்கிலும்தான் உரையாடிக்கொள்கிறோம்என்று ஏங்கினோம்.

 

ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்

பிள்ளைகளேயின்றி நான்கு சுவற்றுக்குள் தங்களையேபிள்ளைகளாக

பாவித்து வாழும் தம்பதியினரின் களிப்புதனை காணுகையில்!

 

இதயமே ஆச்சரியப்படுகிறது நம்மைப்பார்த்து - ஆம்

எதற்குத்தான் ஏங்குகிறாய்?

இல்லாதவனே ஏங்கவில்லை எதுவும்இல்லையென்று!

 

இப்பொழுது நின்றது துடிப்பு ஒரு நிமிடம் புரிதலோடு

பெருமூச்சுவிட்டு!!!.

 

கிருஷ்ண ப்ரியா 

29-10-2018

 

 

 

Post a Comment

0 Comments